Lyrics

Bharadwaj - Yaar Yaaro

0
original text at mamqa.com/ulyricsnew/bharadwaj-yaar-yaaro-1801455
யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது
யார் யாரோ பொதச்ச காடு போகப் போறது

இதில் என்னதுன்னு ஏதுமில்ல ஞானத் தங்கமே
இதில் உன்னதுன்னும் ஏதுமில்ல ஞானத் தங்கமே

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது

பெத்தவெங்க சாயிறாங்க நமக்கு முன்னமே
பெத்ததுங்க பிரியுதுங்க கண்ணு முன்னமே

சோறு போல தீர்ந்து போச்சு சொந்த பந்தமே
என்ன சுட்ட காட்டில் விட்டுட்டீயே ஞானத் தங்கமே

வொடம்போடப் பொறந்த காலு வொடம்போடப் பொறந்த கையி
வொவ்வொன்னாப் பிரியும் போது ஞானத் தங்கமே
இதில் வொறவு மட்டும் நிலைக்குமா அடி ஞானத் தங்கமே

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
பொருள வித்து மனுசன் வாங்கும் காலம் போனதே
மனுசன் வித்து பொருள வாங்கும் காலமாச்சுதே

கொடுமையிலும் கொடுமை என்ன ஞானத் தங்கமே
அது முதுமையிலே தனிமை தானே ஞானத் தங்கமே

நான் ஒதுங்க கூரை இல்ல
நன்றி காட்ட நாதி இல்ல
சாவக்கூடக் கூவிப் பார்த்தேன் ஞானத் தங்கமே
அந்த சாவு எங்கோ செத்துப் போச்சு ஞானத் தங்கமே

யார் யாரோ யார் யாரோ

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது
யார் யாரோ பொதச்ச காடு போகப் போறது

இதில் என்னதுன்னு ஏதுமில்ல ஞானத் தங்கமே
இதில் உன்னதுன்னும் ஏதுமில்ல ஞானத் தங்கமே

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
 Edit 
Copy

YouTube

 Edit 

More Bharadwaj

Bharadwaj - Maargazhiyil | Lyrics
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும் உப்பில்லாம குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும் பாயில்லாம படுத்துப் பாரு தூக்கம் பழகிப்

Bharadwaj - Yaar Yaaro | Lyrics
யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது யார் யாரோ விட்ட

Photo Bharadwaj

 Edit 

Bharadwaj - Biography

 Edit